சூன் 16, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 7பேர் கொண்ட குழுApr 21, 2017

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுகவின் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா என்ற இரு அணிகளுக்கும் ஜூன் 16க்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

Siragu o.p.s. and Palanisamy

இந்நிலையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையின் முடிவில் ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழு ராஜ்யசபா எம்.பி. வைத்தியலிங்கம் தலைமையில், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், வேலுமணி, வீரமணி, தங்கமணி உட்பட ஏழுபேர் கொண்ட குழு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குழு விரைவில் ஓ.பி.எஸ் அணியிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 7பேர் கொண்ட குழு”

அதிகம் படித்தது