கண்ணாடி வீடு!(கவிதை)
ராஜ் குணநாயகம்Jul 23, 2016
கண்ணாடி வீடுள்ளிருந்து
கல்லெறிந்தால்
யாருக்கு பங்கம்……?
நாம் அனுபவிக்கும் துன்பங்கள்
நாம் செயும் காரியங்களின் விம்பங்கள்
நம் நிம்மதியிலா வாழ்வு
நம் அளவிலா,அடங்காத ஆசைகள்,மோகங்கள்!
இதுவே நம் வாழ்வின்
இரகசியம்
சித்தாந்தம்
நிஜமும் கூட!
இது நமக்கு
புரிவதேயில்லை
புரிந்தும் புரிவதில்லை
புரிந்தும் விடுபட முடியவில்லை
விடுபட முயல்கையில்
காலனும் விடுவதில்லை!
நாளும்
கண்ணாடி வீடுள்ளிருந்து
கல்லெறிந்துகொண்டிருக்கும்
ஆறறிவு மானுடம்……………………………!
-ஈழன்-
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கண்ணாடி வீடு!(கவிதை)”