மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கதையும், கானல் நீரும் (கவிதை)

அதிரா

Mar 20, 2021

siragu paguththarivu2

 

 

கதை கதையாய் காரணம்

கூறுகிறேன் – நம் காதலுக்கு

காரணமே கூற முடியவில்லை

உன்னை காதலனாக கொண்டதற்கு

வேரூன்றிய காதலுக்கும் – பிறரின்

வாழ்வுக்கு நீரூற்றிய காதலுக்கும்

கருத்தொற்றுமை கிடையாது

நம்மில் விருட்சமாம் நம்காதல்

நம்மோர்களுக்கு விதையாகட்டும்

நஞ்சு வித்தாக அல்ல.

காதல் – இச்சை அல்ல..

இறந்தாலும் இடைத்தொடரும்

இன்ப உறவு என்பதை…

 

உலகம் கண்ட காவியக்காதல்

பலவாயினும் – நம் உள்ளம்காண்

உலகம் காணா காதலும்

பவளம் தான்

அதன் வடிவம் தான் நம் வாழ்வும்

கண்ணீரும் கலங்கி நிற்கிறது

இன்றுதானா உங்களால் எனக்கு

வடிவம் கொடுக்க முடிந்ததென்று?

பாவம் கண்ணீருக்குத் தெரியவில்லை

இது பிரிவு இல்லை

இதுவும்  ஓர் இதய இணைவு என்று

இன்று இறக்கிறேன் உனக்கு முன்பாக

என்றும் ஜனிப்பேன் உனக்காக..


அதிரா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கதையும், கானல் நீரும் (கவிதை)”

அதிகம் படித்தது