கனவுகள் (கவிதை)
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிMay 8, 2021
மெல்லிய உணர்வுகளும் அடர்த்தியான சொற்களும்
கண்ணிமைகளுக்குள் மோதிக்கொள்ளும்
நிறைவேறா அவா, சாதனைகளின் துடிப்பு
வெளியிட முடியா பிழம்புக் குவியல்கள்
எல்லாம் ஒன்றாய் வண்ணக்கோலமிடும்;
அசைத்துப்பார்க்கும், வெடித்துச் சிதறும்;
கண்விழித்ததும் காணாது மறையும்,
சிலநேரம் நினைவுகளில் உறையும்;
ஆழ்ந்த உறக்கம் அமையா பொழுதுகளில்
சுற்றித் திரியும் கைகால் முளைத்து
முளைத்த கைகால்களுக்கு முகம் வரைந்து
நெஞ்சத்து அமைதி கலைப்பது மூடத்தனமாம்!!
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கனவுகள் (கவிதை)”