மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கர்நாடகாவில் நம்ம உணவகங்கள்Mar 15, 2017

கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று(15.03.16) கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் ஏரி பிரச்சனையைத் தீர்க்க பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

Siragu siddaramaiah

அதன்படி பெங்களூரு ஏரி பிரச்சனைகளைத் தீர்க்க பெலந்தூர், வர்தூர் ஏரிகள் பணிகள் முழுமையாக விரிவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கான வரி உயர்த்தப்படும் என்று அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இரு சக்கர வாகனங்களுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதன்படி இரு சக்கர வாகனங்களின் விலை ஒரு லட்சத்திற்கு மேல் உயரும்.

மேலும் தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம் போன்று கர்நாடகாவிலும் கொண்டுவரப்பட உள்ளதாக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகாவின் “நம்ம உணவகங்கள்” பெங்களூருவில் 198இடங்களில் திறக்க உள்ளது. அந்த உணவகங்களில் சிற்றுண்டி ஐந்து ரூபாய்க்கும், சாப்பாடு பத்து ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கர்நாடகாவில் நம்ம உணவகங்கள்”

அதிகம் படித்தது