கர்நாடக உயர்நீதிமன்றம்: எருது ஓட்டபந்தயமான கம்பாலா மீதான தடையை விலக்க மறுப்பு
Jan 30, 2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தினால் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டதால் தற்போது தடை நீங்கியுள்ளது.
அதேபோல் கர்நாடகாவில் எருது ஓட்டப்பந்தயமான கம்பாலா மீதான தடையை நீக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், எருமைகள் ஓட்டப்பந்தயத்திற்கு ஏற்ற விலங்கினம் இல்லை என்றும், இதற்கு பதில் குதிரைகளை பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர். ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்த பிறகு விசாரணை செய்யப்படும் என்று இவ்வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கர்நாடக உயர்நீதிமன்றம்: எருது ஓட்டபந்தயமான கம்பாலா மீதான தடையை விலக்க மறுப்பு”