மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கிலிருந்து விடுதலைOct 26, 2016

கர்நாடக பெல்லாரி பகுதியில் நடந்த நிலக்கரி சுரங்க ஒப்பந்த விவகாரத்தில் ரூ.40 கோடி லஞ்சம் வாங்கியதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை சி.பி.ஐ கோர்ட்டில் நடந்து வந்தது.

siragu-yediyurappa

இவ்வழக்கில் அரசு தரப்பு ஆதாரங்களுடன் நிரூபிக்காததால் சி.பி.ஐ கோர்ட்டு இன்று எடியூரப்பாவை விடுதலை செய்தது.

நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது என்றும், வாய்மை வென்றுள்ளது என்றும் தீர்ப்பு வெளியான பின் நிரூபர்களிடம் மகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் கர்நாடகாவில் பா.ஜ.க- வை கொண்டுவருவேன், கட்சியை வளர்ப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கிலிருந்து விடுதலை”

அதிகம் படித்தது