ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கல்வி அமைச்சர் : அடுத்த வருடம் முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுMay 17, 2017

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த ஆண்டிலிருந்து பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் செங்கோட்டையன்.

Siragu sengottayan

மேலும் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்(19.05.17)அன்று வெளியாகும் என்று தெரிவித்த அவர், மாணவர்கள் அளித்த அலைபேசி எண்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

பள்ளிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது. அதனடிப்படையில் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார். மாவட்ட நூலகங்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கான நூல்கள் வாங்குவதற்கு 2.13கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கல்வி அமைச்சர் : அடுத்த வருடம் முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு”

அதிகம் படித்தது