மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கல்வி – இன்றைய நிலை (கவிதை)

கௌசிகா

Nov 27, 2021

siragu-kalviyiyal1

 

பள்ளியை நோக்கி ஓடினோம் அன்று

கணினியைத் தேடிச் செல்கிறோம் இன்று.

மலரும் மொட்டுகளுக்கு வழிகாட்ட வழியில்லை

மழலை பேச்சைக் கூட கேட்க முடியவில்லை

கனிவான கண்டிப்பும் அன்பான அதட்டலும்

தொலைந்துப் போனது இன்று !

திரை வழியாக கற்கிறோம்

திசை மாறிப் போகிறோம்

பாடத்தைக் கற்காமல் பாதைக் கிடைக்குமா

இந்நிலை நீடித்தால் வெற்றி காண முடியுமா

நேரில் பார்த்த ஆசிரியரின் முகம்

நீங்காத நினைவில் என் மனம்

இயந்திரத்தில் கற்று இயந்திரம் ஆனோம்

பள்ளிக்கு சென்றால் தான் “மாணவர்” ஆவோம்…!


கௌசிகா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கல்வி – இன்றைய நிலை (கவிதை)”

அதிகம் படித்தது