சனவரி 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைச்சோலை(பாதயாத்திரைகள்: சமாதானத்துக்கு மரணப்பொறி!, சுதந்திரம் வேண்டும்!)

தொகுப்பு

Sep 3, 2016

பாதயாத்திரைகள்: சமாதானத்துக்கு மரணப்பொறி!

-ராஜ் குணநாயகம்

2nd jan 16 newsletter1-1

பண்டா செல்வா ஒப்பந்தத்தை
கிழித்தவை
தனிச்சிங்கள சட்டம்
வரைந்தவை
கறுப்பு ஜூலைக்கு
வித்திட்டவை
யாழ் நூலகத்தை
எரித்தவை
இணைந்த வடக்கு கிழக்கை
பிரித்தவை
பல சமாதான ஒப்பந்தங்களை கிழித்து
புதைத்தவை
முள்ளிவாய்க்காலில்
எங்கள் உறவுகளை கொன்று
ருசித்தவை
சிங்களத்தின்
பல பாதயாத்திரைகள்!

பாவயாத்திரைகள்!
காலம்காலமாய்
தமிழினத்தை அடக்கியாளத்துடிக்கும்
சிங்களத்தின் வன்மக்குறியீடு!

சமாதான சகவாழ்வுக்கு
சாவுமணி
தமிழரின் குருதிக்காய் காத்திருக்கும்
மரணப்பொறி
எனும் பாதயாத்திரைகள்!

பாவயாத்திரைகள்!

-ஈழன்-

 

சுதந்திரம் வேண்டும்!

-இல.பிரகாசம்

Siragu poem

சுதந்திரம் எங்கே எங்கே? மக்கள்

சுதந்திரம் எங்கே எங்கே?

 

அடிமைத்தனங்கள் இன்னும் இங்கே

அடிமட்டத் தொழிலாளரின் வறுமையும் இங்கே

சுதந்திரம் எல்லாம் பெயரளவுக்குத் தானே இங்கே

சண்டைகள் சச்சரவுகள் தொடருது இன்னும் இங்கே

குலபேதங்கள் மதபேதங்கள் இன்னும் இங்கே

கல்விச் சுதந்திரம் மறுப்பதும் இங்கே

பழமைத் தீட்டுதொடருது வேறுவடிவில் இங்கே

புரட்டுச் சாத்திரங்கள் வளருது இங்கே

ஏழைக்கொரு நீதிஉயர் பணக்காரனுக் கொரு நீதி

யெனும் சீரழிவு இன்னும் தொடருது இங்கே

வாழும் மக்களுக்கு உறங்க வீடுகளில்லை இங்கே

வீதியில் வாழும் வறுமைகோட்டு மக்கள் இங்கே

இந்தநிலை எதிர்காலத்தில் மாறவேண்டும் மக்கள்

இன்னல்கள் தீர்ந்து ஓன்றாய் வாழ்தல் வேண்டும்

ஏற்றத்தாழ்வுகள் களைந்து சமநிலை வரவேண்டும்

கருத்துத் தொழில் சுதந்திரம் யாவருக்கும் வேண்டும்

ஆணும் பெண்னும் சரிசமாய்வாழ வழிவகை வேண்டும்

ஆன்றோர் சான்றோர் காட்டும் வழியில் எல்லோரும்

ஓன்றாய் இணைந்திருந்து வாழும் மக்கள்

சுதந்திர சுமத்துவ சகோதரத்துவ எண்ணம் ஓங்கி

வளமையான வாழ்வினை வாழ வேண்டும்


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைச்சோலை(பாதயாத்திரைகள்: சமாதானத்துக்கு மரணப்பொறி!, சுதந்திரம் வேண்டும்!)”

அதிகம் படித்தது