ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைச்சோலை (நீதி இன்னும் சாகவில்லை!, மாற்றம் வருகுது)

தொகுப்பு

Oct 21, 2017

நீதி இன்னும் சாகவில்லை!

- ராஜ் குணநாயகம்

Siragu needhi saagavillai1இங்கு

நீதி இன்னும் சாகவில்லை

உயிர்த்துக்கொண்டது மீண்டும்

வித்தியாக்களின் ஆன்மா வடிவில்!

 

தர்மம் அழிந்துவிடும் என்று

இனியாவது யாரும் கனவு காணவேண்டாம்

அதர்மம் அழிந்துவிடாது என்றும்

இனியாவது யாரும் கவலைகொள்ளவும் வேண்டாம்!
மனிதனை கொன்று

மனிதனை தின்னும்

இவைகள் போன்ற இழிவுப்பிறவிகளுக்கு

இது ஓர் பாடமாகவே இருக்கட்டும்..
இது ஓர் தொடக்கமாகவே இருக்கட்டும்

அதர்மத்தின் அழிவின்….!
-ஈழன்-

 

மாற்றம் வருகுது

(இளைஞர் அரசியல்)

 -இல.பிரகாசம்

Siragu ilagnar arasiyal1

மாற்றம் வருகுது புதுமாற்றம் வருகுது –தோழா

இத்தேசத் தேசத்தி லுள்ள இளைஞர் படையே

இத்தேசத்தை வழிநடத்த நல்லதொரு         (மாற்றம்)

உலக நாடுக ளெல்லாம் வியந்து கண்ணுறும்

உயர்லட்சிய இளைஞன் வழிநடத்த     (மாற்றம்)

பழைமை யெனுங்கொடிய நஞ்சு விதைத்த தீமை

களற்ற புதியதேசம் பிறப்பெடுக்க (மாற்றம்)

பல்இன மாந்தர்தம் உரிமைகள் யாவும் காத்திட

புதிய முற்போக்கு அரசமைய (மாற்றம்)

உயரிய நோக்கங் கொண்ட மக்கள்தம் நலங்காக்கும்

இளைஞர் ஆளும் அரசமைய (மாற்றம்)

அரசியல் எனும்அறி வாயுதம் கொண்டு உலகில்

இளைஞர் அரசியல் காலம்  (மாற்றம்)

 


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைச்சோலை (நீதி இன்னும் சாகவில்லை!, மாற்றம் வருகுது)”

அதிகம் படித்தது