டிசம்பர் 7, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைச்சோலை (நூல்களைப் படி!, ஒளிவீசாத தீபங்கள்!)

தொகுப்பு

Dec 17, 2016

நூல்களைப் படி!

-இல.பிரகாசம்

siragu-reading-books1

சிந்திக்க நல்ல நூல்களைப் படி
சிறந்தநற் பண்பினை ஓதுவாய் உள்ளபடி
பழமையை சீர்தூக்கி புதிய சிந்தனைப்
புரட்சியை செய்வாய் உன்றன் நற்
சமுதாயம் உயர்ந்திடும் படி!- இலக்கியக்
காடென இவ்வுலகம் விரிந்துள்ளதை இப்போ
துணர்ந்து சீரிய எழுத்துக்களால் உழைப்பை
தந்திடுவாய்!வரைந்திடும் எழுத்துக்கள் உன்
சமுதாய மீட்சிக்கு வழிகாட்டியாய் அமைந்திட
நற்சிந்தை மொழிநூல் களனைத்தும் படி!

ஒளிவீசாத தீபங்கள்!

--இல.பிரகாசம்

 

siragu-lights

திருக்கார்த்திகை தீபத்திருநாளில்
ஏழைகளின் வீடுகளும்
அழகுறுத்தப்படுகின்றன!
ஆனால்
அவர்களின் வாழ்வில்
இருளும் வறுமையும் விலகுவதே இல்லை!

இன்னல்களும் வட்டிகளுமே
ஓளிர்ந்து அவர்களது வாழ்வை
கருமையாக்குகின்றன!

 

 


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைச்சோலை (நூல்களைப் படி!, ஒளிவீசாத தீபங்கள்!)”

அதிகம் படித்தது