கவிதைச் சோலை(நீதிக்கு இங்கு நீதியில்லை!, நீயும் வெற்றியாளனே!)
தொகுப்புSep 24, 2016
நீதிக்கு இங்கு நீதியில்லை!
தொடர்ந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகள்
தெரிவதேயில்லையா?
என்கிறார்கள் ஈழத்தமிழர்கள்
கண்களே இல்லாதவர்களிடம்!
இவர்கள் காதுகளுக்கு
எங்கள் அவலக்குரல்கள்
கேட்பதேயில்லையா?
என்கிறார்கள் ஈழத்தமிழர்கள்
காதுகளே இல்லாதவர்களிடம்!
இவர்கள் இதயத்தில்
எம் இனத்தின் மீது
இரக்கமேயில்லையா?
என்கிறார்கள் ஈழத்தமிழர்கள்
இதயமே இல்லாதவர்களிடம்!
முதுகெலும்பில்லாத மனிதன்
நிமிர்ந்து நிற்பதில்லை!
சிரித்துக்கொண்டே
பதில்சொல்கிறது
” அப்பாவி தமிழினமே!
உங்களை யார்
எங்களை நம்ப வேண்டுமென்று
சொன்னது”
ஐ.நா மன்றம்!
அன்று
சிலுவையில்
நீதி தேவன் இயேசு
இன்று
நீதி!
நீதிக்கு இங்கு நீதியில்லை
இன்று…………………………………..!
-ஈழன்-
நீயும் வெற்றியாளனே!
உன்னோடு நீ
உனக்குள் உள்ள
உனக்கேயுரிய தனித்துவமான
சிறப்புக்களை தேடு
உன்னோடு நீயே
போட்டி போடு
அதன் அதி உச்ச வெளிப்பாடுதான்
வெற்றி!
வென்றவனோ
தோற்றவனோ
உனக்கு எதிரியல்ல——-
நீயே உனக்கு எதிரி
நீயே உனக்கு நண்பன்
நீயே வெற்றியாளன்
நீயே தோற்றவன்
உன்னோடு!
நாளும்
உன் இதயத்தில்
உன் இரத்தத்தில்
உன் நினைவில் கனவில்
உன் செயல்களில்
“நான் வெற்றியாளன்”
எனும் நெருப்பு
இடைவிடாமல் பற்றிக்கொண்டிருந்தால்
நீயும் வெற்றியாளனே………………………….!
-ஈழன்-
தொகுப்பு
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைச் சோலை(நீதிக்கு இங்கு நீதியில்லை!, நீயும் வெற்றியாளனே!)”