டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைச் சோலை: (கரு சுமந்த பெண்!, கலைமேகம்!)

இல. பிரகாசம்

Oct 15, 2016

கரு சுமந்த பெண்!

siragu-karu-sumandha-pen-kavithai

உயிர்வலி பெருகுகிற காலம்

அன்பு உயிர்கள் பிறக்கும்

கருவறை!

 

சிப்பிகள் தன்கருவில் இருக்கும்

முத்தினை ஈனும் பொழுது

கொண்ட வலிகள்

என் உள்ளத்தில் ஏற்படுகிறது

மனதும் ஒருநொடி மகிழ்கிறது

மறுகணம் உயிர்ஈனும் வலி உயிரைக்

குடித்துவிடுமோ எனும் அச்சம்

 

அருகில் அன்பின் அரவணைப்பினை

அள்ளிடத் துடிக்கும் மனது

ஏங்குகிறது

சூல் கொண்ட பெண்ணின்

மனம் தன் பிள்ளையின்

அன்பு முத்தங்களைப் பருகிட!

கலைமேகம்!

siragu-karu-sumandha-pen-kavithai2

மரகதமயிலே கொஞ்சும் மொழிபேசும்

மங்கை போலொரு நளினநடனம் புரிவாய்

நீண்டகழுத் தினைசாய்த்து பலபாவனை செய்வாய்

நெஞ்சம் துள்ளிடும் போது பொற்சிறகை

விரித்தே வானம்மகிழ ஆனந்தக் கூத்தாடுவாய்

மேகங்கூடி களித்திடும் காலம் கண்டால்

மயங்குறு நாடகம் நடந்திட கலைமேகம்

மழைத் துளிகளை தூதென விடுவதோ?


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைச் சோலை: (கரு சுமந்த பெண்!, கலைமேகம்!)”

அதிகம் படித்தது