சூன் 16, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைச் சோலை (சுவைத்தேன்!, எல்லோரும் வாழ்க வாழ்கவே!)

இல. பிரகாசம்

Mar 4, 2017

சுவைத்தேன்!

Siragu tamil1

சுவைத்தேன் ஒருதேன் சுவைத்தேன் அதில்

என்நெஞ்சும் மயங்கிடச் சுவைத்தேன்- நாளும்

அதிலொரு துளிசுவைத் தேன்மது சுவைத்தேன்

குறிஞ்சியில் செம்புலப் பெயரார் வரைந்த

அன்புடை நெஞ்சம் கலக்கும் ஓவியக்

காட்சியை சுவைத்தேன்!-கலித்தொகை நூலில்

காதலறம் அளித்திடும் இல்லறம் சுவைத்தேன்

மணக்கும் முல்லையில் இயற்கையின் ஒளியை

மணத்தால் நுகாந்து சுவைத்தேன்!-மருதம்தரும்

காதல்சுக உணர்வினை உள்ளத்தால் சுவைத்தேன்

நெடிய கடலாடும் அலையோடு பாணர்பாடும்

நெஞ்சம் இனிக்கும் நெய்தலை சுவைத்தேன்!

கொடும் பாலையின் இடையில் பாவை

பாடும் பாட்டில் காதலின்பம் சுவைத்தேன்!

நாளும் சுவைத்தாலும் தெவிட்டாத தமிழ்

நூல்சொட்டும் இன்பத்தமிழ் தேனை நாளும்

சுவைத்து என்நெஞ்சம் இனிக்கத் தமிழ்ப்

பண்பாடிப் பாடிச் சுவைத்து மகிழந்தேன்!

———————————————————————

 

எல்லோரும் வாழ்க வாழ்கவே!

 

Siragu-ellaam-kodukkum-tamil1

எல்லோரும் வாழ்க வாழ்கவே- தமிழ்நாட்டிலே

எல்லோரும் வாழ்க வாழ்கவே!

நல்லோர்கள் வாழ்க வாழ்கவே!- தமிழ்நாட்டிலே

நீடுழி வாழ்க வாழ்கவே! அறம்வளர்க்கும்

நல்லோர்கள் வாழ்க வாழ்கவே!

 

பொல்லாங்கு வீழ்க வீழ்கவே-தமிழ்நாட்டிலே

பொல்லாங்கு வீழ்க வீழ்கவே!

பகைமை வளர்க்கும் பொல்லாங்கு வீழ்க வீழ்கவே

தீமை வளர்க்கும் பொல்லாங்கு வீழ்க வீழ்கவே!

 

கலைவளர்க்கும் கழகங்கள் வாழ்க வாழ்கவே!

தமிழ்வளர்க்கும் நற்கழகங்கள் வாழ்க வாழ்கவே

செம்மொழி வளர்க்கும் நற்கழகங்கள் வாழ்க வாழகவே!

 

அறம்பொருள் தரும்தமிழ் இன்பங்கள் செழித்து

எல்லோரும் வாழ்க வாழ்கவே!-தமிழ்நாட்டிலே

அறம்தழைத்து வாழ்க வாழ்கவே!-தமிழ்நாட்டிலே

எல்லோரும் வாழ்க வாழ்கவே!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைச் சோலை (சுவைத்தேன்!, எல்லோரும் வாழ்க வாழ்கவே!)”

அதிகம் படித்தது