ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைச் சோலை (தமிழாய் எழுவோம்!, தமிழால் பிறவிப் பலன்)

தொகுப்பு

Feb 4, 2017

 

தமிழாய் எழுவோம்!

- ராஜ் குணநாயகம்

Siragu Jallikattu_struggle8

எங்கள் சுதந்திர போராட்டம்

மௌனிக்கப்பட்டது

முள்ளிவாய்க்காலிலே…
ஜல்லிக்கட்டுக்கான போராட்டம்

நசுக்கப்பட்டது

மெரீனாவிலே….
மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும்

எட்டப்பன்களே

நம் தமிழ் இனத்தின் சாபக்கேடு!

 

அலைகள் ஓய்வதில்லை

வீழும்

பின்னே எழும்!
வீழ்ந்தாலும்

தமிழாய் வீழ்வோம்

தமிழாய்

மீண்டும் மீண்டும் எழுவோம்!

-ஈழன்-

————————————————————————————————————————————————————

தமிழால் பிறவிப் பலன்

-இல.பிரகாசம்

newsletter-nov-26-3

நனிசுவை தரும் செந்தமிழ் நூல்பல

கற்றுத் தேன்சுவை தமிழில் ஒருபாட்டு

காதில்சுகம் கொள்வது என் வாழ்வில்

கொண்ட பலன்நூறு தகும்-இளங்

குயில்போலே சின்னஞ் சிறுமழலை மொழியில்

கனிந்திடும் கவிதை வனம் சென்று

சங்கத் தமிழ்பாட்டும் திருக்குறளும் நல்

பழமொழி நானூறும் கேட்டிட ஆவியெடுத்த

பிறவிப் பலன்கோடி பெறும்!-நான்

மீண்டும் இன்னொரு தவம் வெய்வேன்!

தமிழ் மண்ணில் பிறந்திட இப்போதே!


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைச் சோலை (தமிழாய் எழுவோம்!, தமிழால் பிறவிப் பலன்)”

அதிகம் படித்தது