கவிதைச் சோலை (தமிழ்மொழி வாழி!, வெளிநாடு வந்தேனடா …!)
தொகுப்புNov 26, 2016
தமிழ்மொழி வாழி!
-இல.பிரகாசம்
வளஞ்செழித்த நிலமோடு மங்காத புகழோடு
பிறந்த தமிழரினமே பல்லாண்டு வாழி!
பெற்றபேறு களிலெலாம் தமிழனாய் பிறப்பெடுத்த
பண்பாட் டுடையபெருந் தமிழினமே வாழி!
தாயாகத் தமிழைப் பெற்றத் தமிழரின்;
வாழ்வில் வளஞ்சேர்க்கும் தமிழ்த்தாயே வாழி!
இன்பமே எந்நாளும் தந்திடுந் முத்தமிழ்க்
கலையே தமிழரின மொழியோடு வாழி!
எல்லாரும் சரிநிகராய் வாழ்ந்திடும் வண்ணம்
நற்பெருஞ் சிந்தைத் தமிழ்மொழியே வாழி!
வெளிநாடு வந்தேனடா …!
-செல்வக்குமார் சங்கரநாராயணன்
விவசாயத்தை விட்டுவிட்டு வெளிநாடு வந்தேனடா !
வியர்வையும் கொட்டுதிங்கே வெறுமெனத் தெருவெளியே !
என் மண்ணில் விழுந்திருந்தால் விதைகள் பல முளைத்திருக்கும் !
இங்கு வந்து கொட்டியதாலோ நினைவு மட்டும் முளைக்குதடா !
இங்கே மகிழுந்து பல ஏறியும் மகிழ்ச்சியொன்றும் காணேனே!
அதிசயங்கள் பல கண்டும் அசந்து வியக்காமல் போனேனே !
குறுஞ்சிறுத்த கண்ணிரண்டும் ஆழியாய் விரியுதுவே
நான் நிலம் அடகு வைத்த பத்திரம் பத்திரமாய் மீட்பேனோ
இக்கரைக்கு அக்கரை பச்சைஎன்று எண்ணி
தெரியாமல் இங்கே ஓடிவந்தேன் !
நாடு திரும்பும் நாளதுவும் வந்து விட்டது –இந்தப்
பசுமையை மட்டும் நான் காணவில்லை !
தொகுப்பு
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைச் சோலை (தமிழ்மொழி வாழி!, வெளிநாடு வந்தேனடா …!)”