நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைத்தொகுப்பு (இயற்கை, புன்முறுவல்)

ராஜ் குணநாயகம்

Oct 15, 2022

 

 இயற்கை

siragu iyarkaiஎனக்கென்னவோ

நாங்கள்

மீண்டும் இயற்கை வழிபாட்டுக்கே

சென்றுவிடுவதே

சிறப்பான தெரிவாய் தோன்றுகிறது;

இந்தமுழுப்பேரண்டம்

சூரியன், சந்திரன்

வானம்

காற்று

மழை,நதிகள், ஆறுகள்

கடல், சமுத்திரம், நீர்

மலைகள்

தாவரங்கள், காடுகள்

இவைகள் இன்றி

நாமில்லை!

ஆயிரம் சமயங்களின்

தேவையும் இனியில்லை!

இயற்கையோடு இயைந்தே

இயற்கையாவோம்! – அதி சிறந்த வாழ்வியல்!

 

புன்முறுவல்

சிரிக்கத்தெரியாத

மனிதர்களிடத்தும்

ஒரு புன்முறுவலை

உதிர்த்துவிட்டே கடந்து செல்ல

கற்றுக்கொள்ளுங்கள்!

 

ஈழன்.


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைத்தொகுப்பு (இயற்கை, புன்முறுவல்)”

அதிகம் படித்தது