நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைத்தொகுப்பு (எரிக்கும் நெருப்பு, பசிக்கு உயிர்)

குமரகுரு அன்பு

Oct 22, 2022

எரிக்கும் நெருப்பு

siragu neruppu1சக்கரைக் கொட்டி
மேலே கட்டைகளை வைத்து அடுக்கி
மேலேச் சர்க்கரைக் கொட்டி
மேலே கட்டைகள் வைத்து அடுக்கி
பானையில் நீரூற்றி மூன்று கொத்துவிட்டு மூன்று சுற்று வந்த பின்
வாய்க்கரிசி போடும் முன்
சக்கரையைத் தேடி
எங்கிருந்தோ மொய்க்க வந்துவிட்டன
எறும்புகள்
நெற்றியில் கற்பூரம் வைத்தாயிற்று
இப்போது கொள்ளியும்…
போரில் இறக்கும் குதிரைகள் போல்
யானைகள் போல்
எதற்கென்றுத் தெரியாமல் எரியத் துவங்கிவிட்டன எறும்புகள்!
நெருப்பும்
யாரென்றுத் தெரியாமல்
எரித்துக் கொண்டிருக்கிறது!!

பசிக்கு உயிர்

பசிக்கும் நேரம்  உணவை வேட்டையாடத் தானே வில்லும் அம்பும் துப்பாக்கியும் குண்டுகளும் கண்டுபிடித்தான்?
மனுசனுக்கு எப்போது
அரக்கனின் கண் வந்தது?
அம்பு போரில் நெஞ்சுகளைத் தைக்கவும்
துப்பாக்கி
குண்டுகள் பறந்து பறந்து உயிர்களைக் துளைக்கவும்
பசிக்கு உணவு தானே மருந்து?
உயிர்களைப் பசிக்குப் பரிந்துரைத்தவர்
யார்?


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைத்தொகுப்பு (எரிக்கும் நெருப்பு, பசிக்கு உயிர்)”

அதிகம் படித்தது