மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைத் தொகுப்பு (உயிர் நீர், காற்று, இனியவள்)

ராம்

Nov 13, 2021

siragu vivasaayi1

 

வையையிலே நீர் வருமோ

வரப்பு எங்கும் வழிந்திடுமோ

பொய்யையிலே புனல் வருமோ

பொதி மூட்டை குவிந்திடுமோ

நட்டோர் உள்ளம் வருந்திடுமோ

கண்டோர் கண் வடித்திடுமோ

வதைப் படலங்கள் தொடர்ந்திடுமோ

விவசாயக் குடி மறைந்திடுமோ

siragu kaatru

 

சாளரத்தை திறந்து விட்டு

காற்றை குறை கூறுவது போல் இருக்கிறது மக்களின் கூக்குரல்

சாவியை வைத்து கொண்டு அவர்கள்

காற்றிடம் பேரம் பேசுகிறார்கள்

Siragu penniyam2

 

மன மொழியை பேசுபவள்

பயித்தியக்காரி

எதிர்த்துப் பேசுபவள்

அடங்காப் பிடாரி

பேசவில்லை என்றால்

அமுக்கனி

முந்திக் கொண்டால்

அவசரக் குடுக்கை

உடல்மொழியை பேசுபவள்

விபச்சாரி

நியாயத்தைப் பேசுபவள்

குற்றவாளி

கோபத்தைக் கொட்டுபவள்

ராட்சசி

இனியவளைக் கண்டறியும்

கண்களுக்காக…

நாங்கள்

- ராம்

 

 


ராம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைத் தொகுப்பு (உயிர் நீர், காற்று, இனியவள்)”

அதிகம் படித்தது