ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைத் தொகுப்பு (முளைக்கும் விதைகள்,ஞாபகங்கள்)

குமரகுரு அன்பு

Dec 18, 2021

முளைக்கும் விதைகள்

siragu-sanga-ilakkiyam2நர்சிங்ஹோம் வாசலில்

துளிர்விடப்போகும் விதைகளைச்

சுமந்துநிற்பவர்களின் துப்பட்டா

இலைகள் காற்றில் படபடக்கின்றன!…

இன்னும் சிலநாட்களில்

அவர்கள் தாங்கியிருக்கும்

விதைகளிலிருந்து வெளியேறியபின்

அச்செடிகள் இடம் மாற்றி மாற்றிப்

பதியனிடப்பட வேண்டும்…

எல்லா விதைகளும் ஒரே நாளில் முளைப்பதில்லை…

எல்லா செடிகளும் அங்கேயே வளர்வதில்லை…

எல்லா விதைகளும் முளைப்பதுமில்லை…

முளைத்த இடத்திலேயே வளரும்

பிள்ளைகள்

நகராத செடிகளாகிவிடுகிறார்கள்!!

*****

 ஞாபகங்கள்

siragu paguththarivu1கடற்கரையோர நண்டுகள்

ஒன்றன் அருகில் ஒன்றென

நகர்வதைப்போல

டைப்ரைட்டரை வரியின்

முடிவுவந்ததும் வலமிருந்து இடம் தள்ளிவிடுவதைப்போல

பம்பரத்தின் சாட்டையைச் சட்டென இழுத்து விட்டதும்

ஏற்படும் சுழற்சியைப்போல

சுழன்று கொண்டிருக்கிறேன்

ஞாபகங்களின் சுழலுக்குள்!

*****


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைத் தொகுப்பு (முளைக்கும் விதைகள்,ஞாபகங்கள்)”

அதிகம் படித்தது