ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைத் தொகுப்பு (வயலின், கன்று, சிறுமீன்)

குமரகுரு அன்பு

Dec 25, 2021

வயலின்

siragu vayal1வயலினிலிருந்து பூத்தபூவின் மணம்

நுகர்ந்த காதுகள் வாயை முனுமுனுக்கும்படி

கட்டாயப்படுத்தின…

முனுமுனுக்க முடியாத சொற்களைப்

பற்றி கொண்ட பாடலொன்றை

சொற்களை விழுங்கிவிட்டு

“ஹம்” செய்ய துவங்கியதும்

சற்றுநேரத்தில் அறுந்துபோன

ராகங்களும் ஸ்வரங்களும்

மற்ற இத்யாதி இத்யாதிகளும்

சூழ்ந்து தொண்டையைப் பிடுங்கிய நேரம்…

ஃபிடில்களைச் செய்ய அறுக்கப்பட்ட

மரத்தின் இலைகளை தன் இசையின் நதியில்

இழுத்துச்சென்று கொண்டிருந்தது வயலின்!!

 

********

 கன்று

siragu kandru1வெளியேற மறுக்கும் கன்றின்

தலையைப் பிடித்து இழுக்கையில்

நடுக்கத்தில் ஆடும்

கொட்டகையின்

கால்களைப் பார்த்துவிட்டேன்!

 

********

 சிறுமீன்

siragu sirumeen2நதியிலிருந்து

வெளியேற எத்தனித்து குதிக்கும் சிறுமீன்

மீது விழும் மழைத்துளி

வாய் கண் வால் முளைத்து

நதிக்குள் மீனாக விழுகிறது!!

********


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைத் தொகுப்பு (வயலின், கன்று, சிறுமீன்)”

அதிகம் படித்தது