சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைத் தொகுப்பு

குமரகுரு அன்பு

Jan 8, 2022

siragu chittukkuruvi1

கொடுங்கோலனின் அரண்மனை சன்னலின்வழி

பறந்துசென்று…

பறந்துசென்று…

திரும்புகிறது ஒரு சிட்டு!!

******

 

siragu thaamarai ilaiyil neer.pngவிழாத இலை

மிதந்து கொண்டிருக்கிறது

ஒட்டாத நீர்த்துளி!

******

 

siragu sun riseகாலைச் சூரியனின்

கதிர்கள்

கடலைக் கிழித்துக்கொண்டு

கழுகைப்போல் இறங்குகின்றன…

தொடமுடிந்த தூரம் வரை தொட்டப்பின்,

இருள் நிறைந்த பகுதியிலிருந்து

மெல்ல முன்னேறி…

வெளிச்சத்தை முட்டி செல்கிற

சின்னஞ்சிறு ஜெல்லிமீன்கள்தான்

இன்னொரு பிறவியில்

ஒளிரும் மீன்களின் கண்களாகின்றன…

******


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைத் தொகுப்பு”

அதிகம் படித்தது