சூன் 23, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

காதல் செய்வீர் உலகத்தீர்!(கவிதை)

இல. பிரகாசம்

Apr 8, 2017

Siragu kaadhal seiveer1

காதல் செய்வீர் உலகத் தீரே

கருணையின் வடிவம் காதல்! உணர்வீர்!

காதல் செய்வோர் உலகின் இறையே!

தீமை தனையழித்து உயிர்ஜீவன் வாழும்

தரணியை படைக்கும் இறைமையே காதல்!

தாய்மை உணர்வே காதல் உணர்வீர்!

 

உயிர்களே தசைகளின் நீரோட்டம் குருதி

உயிர்களின் கருவறை காதல் உணர்வீர்!

ஆதிநாதன் நாயகி கொண்ட அன்பின்

அருளே காதல்! இருளெனும் தீயை

அகற்ற விண்ணில் கலந்து நும்முயிரில்

கலந்த அன்பின் வினையே காதல்!

 

ஏழுலக ஜீவன்களே உயிரின் வினையே

உலகின் ஏமமே காதல்! உணர்வீர்!

ஐம்பெரும்பூ தத்துள்ளும் மலருந் தாமரை

போர்கள் இல்லா இவ்வுலகம் விளைய

பூந்தளிர் தடாகமாய் இவ்வுலகம் மலர்ந்திடக்

காதல் செய்வீர் உலகத் தீரே!

 


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காதல் செய்வீர் உலகத்தீர்!(கவிதை)”

அதிகம் படித்தது