மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

காவிரி நதிநீர் பிரச்சைக்கான அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று கூடியதுOct 25, 2016

காவிரி நதிநீர் பிரச்சைக்காக தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டவேண்டும் என்பது அனைத்து அரசியல் தலைவர்களின் கருத்து. ஆனால் தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டாத நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 25 (இன்று) கூட்டத்தைக் கூட்டியது.

siragu-anaiththukkatchi

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், தி.க. தலைவர் வீரமணி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர். பாண்டியன், த.மா.கா. தலைவர் வாசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தமிழக அரசு சிறப்பு சட்டசபை கூட்டத்தைக் கூட்ட வேண்டும் போன்ற தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் இக்கூட்டம் திமுகவின் கூட்டமல்ல, இன்று பங்கேற்காதவர்கள் நாளை நம்முடன் வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவிரி நதிநீர் பிரச்சைக்கான அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று கூடியது”

அதிகம் படித்தது