ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

காவேரி மருத்துவமனை: கருணாநிதி நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார்Dec 21, 2016

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரல் தோற்று, சுவாசக்கோளாறு போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

siragu-karunanidhi

செயற்கையாக சுவாசிக்க ட்ராக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஞாபக மறதி நோய் இருப்பதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தற்போது கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், சனிக்கிழமை அன்று வீடு திரும்புவார் எனவும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கருணாநிதி குணமடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டதோடு, கருணாநிதி நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவேரி மருத்துவமனை: கருணாநிதி நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார்”

அதிகம் படித்தது