நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 3 இராணுவ வீரர்கள் பலிFeb 23, 2017

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள சோபியன் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக இன்று(23.02.17) வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

siragu-pakistan2

அப்போது ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, அந்த இடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு வீரர்களும் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர்கள் மூன்று பேர் பலியாயினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அருகே வீட்டில் இருந்த பெண் ஒருவரும் பலியானார். தீவிரவாதிகள் தப்பினர். பல ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 3 இராணுவ வீரர்கள் பலி”

அதிகம் படித்தது