ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இரண்டு பேர் பலிMay 13, 2017

காஷ்மீர்ரஜோரி மாவட்டத்திலுள்ள நவ்சேரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

Siragu-pakistan2

இத்தாக்குதலில் நவ்சேரா பகுதியில் உள்ள 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காஷ்மீரின் நவ்சேரா பகுதி மட்டுமன்றி பல பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதன் காரணமாக காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ரஜோரி மாவட்டத்திலுள்ள நவ்சேரா மற்றும் மன்ஜகோட் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்புக்கருதி முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இரண்டு பேர் பலி”

அதிகம் படித்தது