ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

கீழடித் தொல்லியல்! (கவிதை)

இல. பிரகாசம்

Sep 30, 2017

Siragu keezhadi1

 

எத்துணை எத்துணை ஆதாரங்கள் -பல

தலைமுறை தலைமுறை யாய்வாய் செவிவழிச்

செய்தியாய் சங்கநூற் குறிப்புகளாய்த் தொடாந்த

பழந்தமிழர் வாழ்விற் கொருபுது ஆதாரம்

“கீழடி”யெனும் பெருநகரம் ஆ!ஆ!

 

ஆதிச்ச நல்லூர் அரிக்கை மேடெனும் தொல்லியல்

ஆதாரம்பல கிட்டினும் “மேம்பட்ட நகரவாழ்வு

வாழ்ந்தனர் தமிழரென்ற”தொல்பொரு ளாய்வு.

ஈராயிரம் ஆண்டிற்கு முன்னே வாழ்ந்த

நாகரிக குடிகள் வாழ்ந்த நகரமன்றோ?

 

எத்துணை எத்துணை இடங்களில் எல்லாம்

நடாத்திய தொல்பொரு ளாய்வு –நம்

நாட்டுக் குடிகள் வாழ்ந்த எச்சம்

புதையுண்டு கிடந்த தமிழர் நாகரிகம்

அந்தோ அந்தோவென விம்மும் தமிழினமே

 

“கீழடி”நாகரீகம் கண்டடைந்த தமிழினமே

காண்குதும்! வரலாறு சிதைவதை காண்குவமோ?

வராலாறு சிதைவதைக் காண்டு பொறுப்போமோ?

எத்துணை எத்துணை தடைவந்தே மறித்தாலும்;

மாண்டார் தகைமை வராலாறு திரிகுவதோ?

 

தமிழ்வேந்தர் நாடாண்ட நாடெல்லாம் முறைசென்று

தொண்மை வரலாறு கண்டறிந்து நாட்டுவதும் -நம்

தலையாய கடமை யன்றோ? ஆம்!ஆம் –மீண்டும்

வரலாறு முறைசெய்யப் படுதல்; வேண்டும்

கீழடித் தொல்லியல் தொண்மை முதற்கொண்டு

 

கண்டெடுத்த தொல்பொரு ளெச்சங்கள் யாவைவும்

காலக்கணக் கீடுசெய்து நிறுவுதல் வேண்டும்.

முதுதாழிகள் சிதைநிலை யடைந்த எச்சங்கள்

சொல்வடிவு தாங்கிய ஓவியங்கள் இன்னபிற

களஆய்வுகள் மையங்கள் நிறுவுதல் வேண்டும்.

 

கண்டெடுத்த தொல்பொருள் ளெச்சங்கள்; யாவும்

களஆய்வு மைத்திற் காத்திடவும் வேண்டும்

புதையுண்ட வரலாறு மீண்டும் புத்துயிர்

பெறுதல் வேண்டும்! முந்தை வரலாறு

கீழடி யோடுபயிற்று வித்தல் வேண்டும்!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கீழடித் தொல்லியல்! (கவிதை)”

அதிகம் படித்தது