குடியரசு தின விழா: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
Jan 25, 2017
68வது குடியரசு தினவிழா நாளை நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளையொட்டி பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது. அதனால் தலைநகர் டெல்லியில் 60ஆயிரம் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதுகாப்பு பணியில் 15ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழவதும் 1.12 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் குடியரசு தின விழாவிற்கான ஒத்திகை நடைபெறுகிறது. இங்கு இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “குடியரசு தின விழா: நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்”