குருந்தூர் மலையில் புத்தர்! (கவிதை)
ராஜ் குணநாயகம்Jun 25, 2022
நாடே நாசமாய்போய் கிடக்கிறது
சோற்றுக்கே வழியில்லாமல்
பிச்சை பாத்திரத்துடன்
நாடுகளின் கால்களில்
உங்கள் இனவாத அரசு!
கோவணம் மட்டும்தான்
மிச்சம்;
கோவணமே போனாலும்
உங்கள் பாழடைந்த
மண்டைகளுக்குள்
“பௌத்த மதவெறி”
அரச விருட்சம்போல்
வியாபித்துக்கிடக்கிறது!
இதுவும்
நிகழ்கால
இன்றைய சாட்சி!
ஈழன்.
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “குருந்தூர் மலையில் புத்தர்! (கவிதை)”