குழந்தைகள் பக்கம்
ஆச்சாரிJul 1, 2011
கேட்பார் பேச்சு
ராமபுரம் என்ற ஊரில் கந்தசாமி என்ற உப்பு வியாபாரி இருந்தார். பக்கத்து ஊர்களில் நடக்கும் சந்தைகளில் உப்பு விற்று வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் தன் மகன் சுப்புவுடன் உப்பு விற்க பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்கு கிளம்பினார். வழியில் ஒரு காட்டையும், மலையையும், ஆற்றையும் கடக்க வேண்டி இருந்தது. உப்பு மூடையை அப்பா கந்தசாமி சுமந்து சென்றார்.
சிறிது தூரம் சென்றப் பின் ஊர்க்காரர் பெரியசாமியை சந்தித்தனர். இவர்களைப் பார்த்த அவர், “சுப்பு மூடையை அப்பாவிடம் இருந்து சிறிது நேரம் வாங்கிக்கொள்” என்றார். அதனைக்கேட்டு அப்படியே செய்தான் சுப்பு. மூடையை சுப்பு வாங்கிக் கொண்டபின் அப்பாவுக்கு ஆசுவாசமாக இருந்தது. இருவரும் காட்டைக் கடந்தனர்.
அடுத்ததாக மலை மீது ஏற ஆரம்பித்தனர். அவ்வழி சென்ற துறவி ஒருவர் மூடையை அப்பாவும் பிள்ளையும் ஆளுக்கு ஒருவர் முன்னும் பின்னுமாக ஒரு கம்பில் கட்டி தோள்களில் சுமந்து சென்றால் பாரம் தெரியாது என்றதைக் கேட்டு இருவரும் சேர்ந்து அவ்வாறே தூக்கி மலையை எளிதாக கடந்தனர்.
ஆற்றைக் கடந்தால் சந்தையை அடைந்து விடலாம் என்றத் தருவாயில் ராமபுரத்தை சேர்ந்த காய் வியாபாரி முத்துவை ஆற்றங்கரையில் பார்த்தார்கள். மூவரும் பேசிக்கொண்டே ஆற்றைக் கடக்க ஆரம்பித்தனர். முத்து அவரது காய் மூடையை கயிற்றில் கட்டி நீரில் எளிதாக இழுத்து வந்தார். சுப்பு உப்பு மூடையை தலையில் சுமந்து வருவதை கண்டார் முத்து. உதவும் எண்ணத்தில் முத்து தன்னிடம் இருந்த ஒரு கயிற்றைக் கொடுத்து அவர்களையும் தன்னைப் போல் மூடையை கயிற்றால் கட்டி நீரில் இழுத்து வந்தால் பாரம் தெரியாமல் ஆற்றைக் கடந்துவிடலாம் என்று அறிவுரை கூறினார். உடனே சுப்புவும் கந்தசாமியும் அவ்வாறே மூடையை கயிற்றில் கட்டி நீரில் இழுத்து ஆற்றைக் கடந்தனர். கரைக்கு சென்ற பின்னர் மூடையைத் தூக்கலாம் என்று எண்ணி கயிற்றை இழுத்துப் பார்த்தால் உப்பு மூடைக்குப் பதில் ஒரு காலி கோணிப்பை தான் நீரில் இருந்து வெளியே வந்தது.
உப்பு வியாபாரியான தங்களுக்கு உப்பு நீரில் கரையும் தன்மையுடையது என்று தெரிந்திருந்தும் சிந்திக்காமல் இப்படிக் கேட்பார் பேச்சைக் கேட்டு மோசம் போய்விட்டோமே என்று கவலையடைந்தனர். இனிமேல் யார் எது கூறினாலும் சிந்தித்தே ஏற்றுகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர். நல்ல முடிவு தானே?
தெரியுமா குட்டிகளா?
1. இதயத்தில் உள்ள எலும்புக்கு எண்ணப் பெயர்?
ஓஸ் கர்டிஸ் (os cordis) ஒட்டகம்,யானை, நாய் மற்றும் நிறைய கால்நடைகளுக்கு ஓச கர்டிஸ் (os cordis) என்றழைக்கப்படும் இதய எலும்பு உள்ளது.
2. நீல நிறம் இரத்தம் உள்ள உயிரினம் எது?
அக்டோபஸ், நண்டு மற்றும் பல கடல் வாழ் உயிரினங்கள் நீல நிறம் இரத்தம் கொண்டது, காப்பர் சத்து நிறைந்து உள்ளதால் இவைகளுக்கு நீல நிற இரத்தம் உள்ளது.
3. வயிற்றில் பல் உள்ள பூச்சி எது?
கரப்பான் பூச்சி.
4 . நிறமில்லா இரத்தம் உள்ள பூச்சி எது?
கரப்பான் மற்றும் (bug) பூச்சி வகை.
5. மஞ்சள் அல்லது பச்சை நிற இரத்தம் உள்ள உயிரினம் எது?
வண்டு மற்றும் பூச்சிகள்.
ஹெமொல்ய்ம்ப் (hemolymph)என்ற திரவம் வண்டு மற்றும் பூச்சிகளுக்கு மஞ்சள் அ பச்சை நிறத்தைக் குடுக்கிறது.
6 . மூன்று இதையங்கள் உள்ள உயிரினம் எது?
ஆக்டோபஸ்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “குழந்தைகள் பக்கம்”