பிப்ரவரி 15, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

கூடங்குளம் அணு உலை ஆபத்து – என்னவாகும் எதிர்காலம் ? மக்கள் வினா

ஆச்சாரி

Jan 14, 2012

சுப்பராயன்

அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கமானது கடந்த மூன்று மாதங்களாக எந்த ஒரு சிறு வன்முறைச் செயலுக்கும் நாங்கள் இடம் கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க உண்மை. நாங்கள் அற வழியில்தான் தீர்வு காண வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம். மீனவர்கள் போர்க் குணம் மிக்கவர்கள். அவர்களே தங்களை மாற்றிக்கொண்டு அமைதி வழியில் போராடி வருகிறார்கள். அப்படிப்பட்ட எங்களை சமூக விரோதி என்று சித்திரிப்பதும் தேச விரோதிகள் என்று சித்திரிப்பதும், இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று சித்திரிப்பதும் திட்டமிட்ட சதியாக நாங்கள் நினைக்கிறோம்.

இப்படி தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். எங்களுக்குப் பின்னால் புலிகள் இருக்கிறார்கள் என்றும் வன்முறைப் போராட்டம் என்றும்  எங்கள் போராட்டத்தை மதம்- சாதி தூண்டிவிட்டிருக்கிறது என்றும் இப்படி எந்த எந்த வழிகளிலெல்லாம் எங்களை இழிவுபடுத்த முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் தொடர்ந்து பேசி வருகிறார்கள் எழுதி வருகிறார்கள்.

அதையும் சில ஊடகங்களும் மக்களும் நம்புகிறார்கள். நிச்சயமாக நாங்கள் அறவழியில்தான் போராடி வருகிறோம். காந்தியடிகள் மக்களுக்கும் பொதுச் சொத்துக்களுக்கும் இடையூறு செய்யாமல் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களை நடத்தினார். அதேபோலத்தான் இரண்டாவது கட்டப் போராட்டத்திபோது நாங்கள் இடிந்தகரையில் கூடன்குளத்திற்கு வந்தபோதுகூட அந்தப் பணியாளர்களைத்தான் வேலைக்குச் செல்லாமல் தடுத்தோம். நாங்கள் சாலைக்கு வந்தாலும் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. இப்படி அறவழியில் போராடுவது நிச்சயமாக வன்முறை ஆகாது.

மக்கள்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக தங்கள் வருமானத்தை இழந்து தங்கள் நேரத்தையும் குடும்பத்தையும் பொருட்படுத்தாமல் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்துகிறார்கள். எந்தவிதமான சோர்வும் தயக்கமும் மக்களிடத்தில் கிடையாது. ஒருவேளை வழி நடத்தும் நாங்கள் கூட சோர்ந்திருக்கலாம். ஆனால் மக்கள் பின்னோக்கிப் பார்ப்பதோ தயக்கம் காட்டுவதோ இல்லை. இந்தப் பிரச்சினையில் ஒரு முடிவு காண வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த அணு உலையை மூடவேண்டும் என்ற வேகம் எல்லோருக்கும் வந்துவிட்டது,

அந்த வேகம் இருப்பதால்தான் அவர்கள் சோர்ந்து போவதில்லை. அணு சக்திக்கு எதிரான இந்த மக்கள் இயக்கத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள்தான் எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இங்கு வந்து அரை மணி நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு- பாதுகாப்பாக உள்ளது என்று பிரகடனப்படுத்திவிட்டார். அவருக்கு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை. அணு உலையை ஆதரித்து அதைக் கட்டி முடித்துவிட வேண்டும் என்று ஊடகங்களுக்குச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். அவர் இங்கு ஒரு பொது நபராக வரவில்லை. இந்த அணு உலையை எப்படியும் இயக்கிவிட வேண்டும் எனும் திட்டத்தோடு வந்து சான்றளித்துள்ளார்.

அதுமட்டுமல்ல- இந்தப் பகுதி மக்களுக்கு அவர்களின் வளர்ச்சிக்காக திட்டங்களுக்கு ஒரு பத்து அம்சத் திட்டத்தை அவர் வெளியிட்டிருக்கிறார். இன்றைக்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்றி பல தொழிற்சாலைகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்யும் இயற்கைக்கு எதிரான குற்றங்களை மறைப்பதற்காக சில பணிகளை- பிச்சை போடுவது போல செய்துகொண்டிருக்கிறார்கள். அதேபோல அப்துல் கலாம் அவர்கள் அந்த திட்டத்தை அறிவித்து இந்த மக்களை இழிவுபடுத்தியிருக்கிறார்.

இலவசங்களைக் கொடுத்து மக்களை மயக்கிவிடலாம் அவர்களின் உரிமைகளைப் பறித்து விடலாம் என்ற சிந்தனையோடு அவர் இப்படி அறிவித்துள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்மேல் இருந்த கொஞ்சம் நம்பிக்கையைக் கூட மக்கள் இழந்துவிட்டார்கள். அவர் இங்கு வந்தபோது மூன்று மாதமாக போராடும் மக்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கூட அவருக்கு இல்லை. அவர் ஒரு தமிழர் இன்னும் சொல்லப்போனால் மீனவர். ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த மீனவர்கள் பற்றி இதுவரை அவர் ஒரு வார்த்தைகூட சொன்னது கிடையாது.

அவரால் இந்த மக்கள் சோர்ந்து போகவில்லை. இந்த அணு உலைக்கு ஆதரவாக யார் வந்தாலும் சரி எந்த வகையான பிரச்சாரம் செய்தாலும் சரி அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு சின்ன சறுக்கல்கலாக நினைத்துவிட்டு வெற்றி கொண்டு இந்த அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடரும் தொடரும் என்று மக்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கதையூர் ராசன்

நான் கூடன்குளத்தைச் சேர்ந்தவன். பல ஆண்டுகளாக அணு உலைக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக ஜப்பானின் புக்குஷிமா அணு விபத்து ஏற்பட்டதனால் மக்களிடத்தில் குறிப்பாக கூடங்குளம் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டதனால் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு எப்படியாவது இந்த அணு உலையில் இருந்து தங்களது வாரிசுகளையும் தங்களது வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் முனைந்து செயல்படுகிறார்கள். அதுபோல இடிந்தகரையில் வாழக்கூடிய மக்களும் மற்றும் கடற்கரையோர மக்களுமாக இணைந்து மூன்று மாதங்களாக தொடர்ந்து நடந்தது. தற்போது மூன்றாவது கட்டமாக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு கிராமத்திலிருந்து வந்து அணு உலைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களோடு இடிந்தகரை, கூடங்குளம் மக்களும் இணைந்து போராடி வருகிறார்கள். தொடர்ந்து இந்தப் போராட்டம் நடைபெறும். அணு உலை மூடப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்பதை மக்கள் சார்பாக நான் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த அணு உலையானது பல விதிமுறைகளை மீறி நடந்திருக்கிறது. குறிப்பாக இந்த அணு உலையிலிருந்து 1.6 கி.மீ.சுற்றளவுக்கு ஒரு வீடோ ஒரு நபரோ வாழ முடியாது. ஆனால் இந்த அணு உலைக்கு மிக அருகிலேயே கிட்டத்தட்ட 450 சுனாமி வீடுகள் இருக்கின்றன. அதுபோல கூடன்குளத்தின் தெற்குப் பகுதி வைராவிகிணறின் முழுப் பகுதி அணு உலைக்கு ஒரு கி.மீ.க்குள்தான் உள்ளது. அப்படிப்பட்ட வேளையில் இந்த அணு உலை அரசின் சட்டத்தை மீறி செயல்படுகிறது. கூடங்குளம், வைராவிகிணறு, இடிந்தகரை, பஞ்சல் ஆகிய ஊர்கள் அணு உலைக்கு ஐந்து கி.மீ. சுற்றளவுக்குள் உள்ளன. இவ்வளவு விதிமுறைகளையும் மீறி எங்களை ஏமாற்றி எங்கள் அறியாமையை பயன்படுத்தி இந்த அணு உலை கட்டப்பட்டிருக்கிறது. அணுக் கழிவு மிகப் பெரிய ஆபத்தானது. இந்த அணு உலை ஒப்பந்தம் ஏற்பட்டபோது அணுக் கழிவுகள் ருசியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இங்கேயே வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. நான் இணையதளத்தில் பார்த்தேன், பெரிய பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களின் மூலம் அணுக் கழிவுகள் பசுபிக் பெருங்கடலில் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆக எங்கள் கடலில்தான் வைக்கிறார்கள். அதனால் எவ்வளவு பெரிய பாதிப்பு. அதனால் எங்கள் மக்கள் பாதிப்படைவார்கள். இதை எதிர்த்துத்தான் இந்தப் போராட்டம். பாதுகாப்பானது என்று கூறுகிறார்கள். ஆனால் குசராத் மாநிலம் கர்காபூரில் அணுக் கதிரால் பலவிதமான தோல் நோய்கள்- தைராய்டு போன்ற நோய்களால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு மட்டுமல்ல, கல்பாக்கத்திற்கு அருகில் மாமல்லபுரத்தில் மீன்களில் கதிர் வீச்சு காணப்படுகிறது. இவ்வாறு கல்பாக்கம் அணு உலையும் பாதுகாப்பானது- கர்காபூர் அணு உலையும் பாதுகாப்பானது. ஆனால் இந்த அணு உலைகளால் மக்களும் பாதிப்படைகிறார்கள், கடலில் உள்ள மீன்களும் பாதிக்கப்படுகின்றன, எனவே நாங்களும் பாதிக்கப்படுவோம் எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே இந்தப் போராட்டத்தை மூன்று மாதமாக ஏன் எத்தனை மாதமானாலும் எத்தனை வருடமானாலும் இந்த அணு உலை மூடப்படும் வரை இந்தப் போராட்டம் நடந்தே தீரும்.

ஏ.எஸ். ரவி கூடங்குளம் விவசாய சங்கத் தலைவர்

இந்த அணு உலைக்காக எங்களின் நிலத்தை எங்கள் முன்னோர்களிடம் இருந்து வாங்கும்போது உங்கள் பிள்ளைகளுக்கு வேலை தருவோம் என்று சொல்லி வாங்கினார்கள். ஆனால் எங்களுக்கு வேலை தரவில்லை. இந்த நிலைமையில் சுனாமி வந்தபோது நூறு அடிக்கு மேல் தண்ணீர் எழுந்தது. ஜப்பான் புக்குசிமாவில் சுனாமி வந்து அணு உலை பாதித்தபோதுதான் எங்களுக்குத் தெரிந்தது. 25 அடியில் சுவர் கட்டியிருக்கிறோம் பாதிப்பு வராது என்றார்கள். சுனாமி அலை நூறு அடிக்கு வந்ததே என்று கேட்டபோது சரியான பதில் சொல்லவில்லை. அணு உலையின் கழிவை எங்கு வைப்பார்கள் என்று சரியாகத் தகவல் தரவில்லை. நிலநடுக்கம் வந்தால் பாதிக்கப்படுவோமே என்று கேட்டதற்கு அணுமின் நிலைய அதிகாரிகள் சரியான பதில் தரவில்லை. நாங்கள் பலமுறை கேட்டபோது எங்களை மிரட்டும் விதமாக பல வழக்குகள் பதிவு செய்தனர். இப்படி பல தகவல்களை சொல்லாமல் மூடி மறைப்பதால்தான் மக்கள் வெகுண்டெழுந்து போராடுகின்றனர்.

இந்த அணு உலையை கட்டிய 2004 ஆம் கட்டினார்கள். கடல் மணலை வைத்து கட்டினார்கள். இதைக் கட்டியதில் தரமில்லை.என்று கூறி அப்போது நாங்கள் போராடும்போதே பதிநான்கு பொறியாளர்கள் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டனர். அதனால் நாங்கள் கேட்பது எங்கள் உயிருக்கு பாதுகாப்பு. இந்த உலை தரமானதா தரம் இல்லாததா? சுனாமி வந்தால் எங்களை எப்படி காப்பாற்றுவீர்கள்? இந்த இடத்தில் ஏற்கனவே எரிமலைக் குழம்பு வந்திருக்கிறது இந்த இடத்தில் எப்படி கட்டினீர்கள் என்று கேட்டால், பதில் இல்லாத காரணத்தினால் மக்கள் நெருக்கடி உள்ள இடத்தில் கட்டிய காரணத்தினால் இந்த உலையால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம்.

At best, the sensitive tutor will construct a lively and interactive situation in the gifts studio where there are challenges set and conversations about learning taking place

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

19 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கூடங்குளம் அணு உலை ஆபத்து – என்னவாகும் எதிர்காலம் ? மக்கள் வினா”
 1. jawahar says:

  அதிக கன்டுபிடிப்பு அதிக ஆபது

 2. JOHN says:

  தமிழ் நாட்டை காக்க வேண்டியது நமது கடமை. கரண்ட் தேவை இல்லை.

 3. JOHN says:

  ஒன்று சேர்வோம் வெற்றி பெறுவோம்.

 4. JOHN says:

  போதும் பொறுத்தது பொன்கி எழுவோம்.

 5. JOHN says:

  தமிழ் நாட்டிற்கு தீமை செய்யும் எந்த ஒரு சட்டத்தையும் நாம் அனுமதிக்க கூடாது. கூடன்குளம் ஆரம்பித்து விட்டார்கள், அதை ஆரம்பிக்க காரணமாக இருந்த அனைவரையும் சும்மா விடக்கூடாது. போராடுவோம் நம் உயிர் உள்ள வரை போராடுவோம். வெற்றி பெறுவோம். தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தால் உலகயே மாற்ற முடியும்.

 6. SIVACHANDRAN says:

  போராடும் என் இனமக்களுக்கு என் முழு ஆதரவு உண்டு.

 7. SIVACHANDRAN says:

  அனுசக்தியே வேன்டாம்

 8. chellam says:

  அணு உலை செயல்பட்டால் அணு உலையை சுற்றி உள்ள 60 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதியிலுள்ள அனைது பொருள்களும் கதிரிய்க்கத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது

  அணு உலை செயல்பட்டால் மேல் குறிப்பிட்ட பகுதிகள் அனைட்தும் உயிர் வாழ தகுதி அற்றதாக மாறீவிடும்

 9. chellam says:

  கூடங்குளம் அனு மின் நிலையம் ஒட்டு மொத்த தமிழ் நாட்டையே அழிக்கும் சக்தி கொன்டது உன்மையிலேயே இது உன்மையன கருத்து
  படித்த மக்கலுக்கே இது சரியா க புரிய வில்லை பின் எப்படி பாமர மக்கலுக்கு புரியும்
  ஊடகங்கள் எதை கூறுகின்றனவோ அதையே அனைவரும் நம்புகின்றனர் இது அரொக்கியமான போக்கு அல்ல
  மக்களின் அறியாமையை பயன்படுட்திகொண்டு ஊடகங்கள் வழியாக தங்களின் கருததை பரப்ப இன்டிஅ அரசு எண்னுகிறது

 10. rajakumari says:

  in my point of view kudankulam project is the very essential of tamil nadu i also agree with project.i analys the all things this kudangulam is very safety no negative point.pls agree to all people

 11. பால்பாண்டி says:

  யுரேனியம்நிரப்பும்முன்கூடங்குளம்அணுமின்நிலையத்தைஇடமாற்றம்செய்துகேரளாவில்வையுங்கள்

 12. பால்பாண்டி says:

  தமிழ்நாட்டிற்க்குதீங்குசெய்யும்கூடங்குளம்அணுமின்நிலையம்வேண்டாம்

 13. g.kumaresan says:

  kudankulam project is most important for us because electric power is basic needs for all each one of people depend upon the electric power so kudankulam is project is acept that one

 14. MUTHUKRISHNAN says:

  கூடண்கூளம் வேண்டாமே வேண்டாம்.

 15. Arunji says:

  Kudankulam project is very important project to improve our nation . The illiterates did not know the nuclear energy is the best energy.the government dont hear the sounds of the strike persons if government hear her sound there are no good plans coming to an end. Arrest or shot the culprits of the kudankulam. It is the end to open the kudankulam

 16. m.rajalakshmi says:

  i am also accepted your point. all the best for you pls save our people

 17. Karthik says:

  அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கமானது கடந்த மூன்று மாதங்களாக எந்த ஒரு சிறு வன்முறைச் செயலுக்கும் நாங்கள் இடம் கொடுக்கவில்லை.

 18. கி.பிரபா says:

  அன்பரின் கருத்துகளே என்றன் கருத்துமாகும்.பொய்யர்களின் உலகில் வாழும் நாம் எக்காரணத்திற்காகவும் போராட்டத்தைக் கைவிடக் கூடாது.வாழும் வரை போராடுவோம்.வினை விதைத்தவன் வினை அறுப்பான்.வேதனைக்கு ஒரு பிரதமரை நாம் நம் வரிப் பணத்தில் வாழவைக்கிறோமே.அரசியலில் குளிர் காயும் கட்சியினருக்குக் கீழ்மட்ட மக்களின் உண்மையான அன்பு,மனவலிமை,உழைக்கும் நிலைமை எதுவும் தெரியாமலா இருக்கும்

அதிகம் படித்தது