நவம்பர் 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு: பயிர்க்கடனை விவசாயிகளிடமிருந்து வற்புறுத்தி வாங்க வேண்டாம்May 11, 2017

விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் நாற்பது நாட்களாக போராட்டம் நடத்தினர்.

Siragu farmer

இப்போராட்டத்திற்கு பல்வேறு மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் ஞானசேகரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வாங்குவதற்கு வற்புறுத்த வேண்டாம் என்றும், குறுகிய கால பயிர்கடனை மத்திய கால கடனாக மாற்ற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மறு உத்தரவு வரும் வரை விவசாயிகளிடம் பயிர்க்கடனை கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம் என்றும் கூட்டுறவு சங்க பதிவாளர் ஞானசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு: பயிர்க்கடனை விவசாயிகளிடமிருந்து வற்புறுத்தி வாங்க வேண்டாம்”

அதிகம் படித்தது