கேரள அரசு அறிவிப்பு: பெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க தயார்
Nov 7, 2016
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பதில்லை. 2006ம் ஆண்டு இந்திய இளம் வழக்கறிஞர் சங்கம் மற்றும் 5 பெண் வழக்கறிஞர்கள் சேர்ந்து கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கேரள அரசு, இது பாரம்பரியமாக கடைப்பிடித்து வருவது, எனவே சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கமுடியாது என்று தெரிவித்திருந்தது. தற்போது கேரள அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அம்மனுவில் பெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கத் தயார் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து இவ்வழக்கு 2017ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கேரள அரசு அறிவிப்பு: பெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க தயார்”