கொரோனா (கவிதை)
நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.Jun 20, 2020
கொலையாளியா நீ
அயலகத்தால் அளிக்கப்பட்ட கொடையாளியா
சுற்றும் பூமியை சற்று நிறுத்திப்பார்த்தது
சுற்றமும் நட்பும் நலமோடு வாழ விரும்பியது.
வேலை வேலை என்று ஓடி அலுத்தவனுக்கு
வேண்டுமளவு ஓய்வு கொடுத்தது.
தூக்கத்தை கலைத்து உணவைத் தவிர்த்து
பயணத்தில் நெருக்கிச்சென்ற பள்ளிக்கல்வியை
பக்குவமாய் அலைவரிசையில் பங்கிட்டளித்தது.
தள்ளி வைத்துப் பார்த்த துப்புரவுத்தொழிலை
தூக்கி வைத்துக் கொண்டாடியது.
அர்ப்பணிப்பு வேலையாம் மருத்துவத்தொழிலை
கடவுளின் அம்சமாக காண வைத்தது.
பாதுகாவலர்களாம் காவல்துறையை
கரிசனமாய் கண்காணிக்க வைத்தது.
வேலைகாரிகளை தவிர்த்து
ஆரோக்கிய சமையலை அதிகரித்தது
பறவைகள் உற்சாகமாய் வானில் பறக்க
மாசில்லா வாயுமண்டலம் அளித்தது.
அமைதியாய் இருந்த அரசியல்வாதிகளை
அரங்கேற்றம் செய்ய வைத்து ரசித்தது
தமிழின் ஒற்றுமையைக் கலைத்த வைரசே
ஒற்றுமையாய் போராடி உனை விரட்டுவோம்
வரலாறுகளும், இயற்கை மருத்துவமும்
நிறைந்த இந்தியாவில் இக்கொடியகாலமும்
ஒரு வரலாற்றுக் குறிப்பாக மட்டும்
வெற்றி வாகை சூடட்டும்
ஏட்டில் எழுதப்படட்டும் பாரதப் பண்பாடு
சரித்திரம் படைக்கப்படட்டும்
மருத்துவத்தின் மகிமை
நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொரோனா (கவிதை)”