சனவரி 22, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கோவா, உ.பி., உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி அல்லது மார்ச்சு மாதத்தில் நடக்கும்Oct 24, 2016

கோவா, உ.பி., உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி அல்லது மார்ச்சு மாதத்தில் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

siragu-election-commission-of-india

கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநில சட்டசபை பதவிகாலம் மார்ச்சு மாதத்துடன் முடிவடைவதால் முதல் கட்டமாக இந்த நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கும் என்றும், உ.பி., சட்டசபை பதவிகாலம் மே மாதத்துடன் முடிவடைவதால் 7க்கும் மேற்பட்ட கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக பிப்ரவரி முதல் தேதி கூட்டத்தொடர் கூடுகிறது. இக்கூட்டத்தொடர் முடிந்த பிறகு தேர்தல் நடக்கவுள்ள தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஐந்து மாநில தேர்தல் குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்று தலைமை தேர்தல் கமிஷன் நஜீம் ஜைதி கூறியுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கோவா, உ.பி., உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி அல்லது மார்ச்சு மாதத்தில் நடக்கும்”

அதிகம் படித்தது