சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு
May 19, 2017
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ரூ.2262 கோடி பணத்தை சென்னையில் இயங்கி வரும் வாசன் ஹெல்த்கேர் நிறுவனம் மூலமாக வெளிநாடுகளில் இருந்து அன்னிய செலாவணி மோசடி செய்து பெற்றுள்ளதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரத்திடம் ஏப்ரல் 17ல் நோட்டிஸ் அனுப்பியது அமலாக்கத்துறை. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன வழக்கில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தியது சி.பி.ஐ.
இதையடுத்து கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றதாகக் கூறப்படுகிறது. புலனாய்வு ஆவணங்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால் நேரில் விளக்கமளிக்க அவகாசம் கோரி கார்த்தி சிதம்பரம் சார்பில் அமலாக்கத்துரைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு”