நவம்பர் 21, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

சிலை அல்ல அவர் சித்தாந்தம் (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Apr 13, 2019

siragu election-commission3

 

சிலை அல்ல அவர் சித்தாந்தம்

சீறியெழும் அலைகளாய்

ஆர்ப்பரிக்கும் சிந்தனை

சில்வண்டுகளின் ஆணவத்தை

அழிக்கும் சினத்தீ!

செறுப்பொன்று வீழ்ந்தாலே

முளைத்திடும் சிலையாய்

சிலையொன்றை உடைத்தால்

சித்தாந்தம் சீறாதோ?

உடைத்து விளையாடும்

உஞ்சி விருத்திகளே

உதைகள் உண்டு

உங்களுக்கு காத்திருங்கள்!

உள்ளம் பண்படா

உலுத்தர்களே; உடைபடும்

உங்கள் ஆதிக்கம்;

உணர்வுகளின் வெப்பத்தை

உணரும் காலம்

விரைவாய் கனியும்!

பொங்கிடும் போராட்டம்

தூளாக்கும் சனாதனத்தை,

பழங்கதைகள் புராணங்கள்

பொசுங்கிடும் நெருப்பில்

மனுவின் தந்திரமும்

துகளாய் உடையும்

மந்திர மோட்சங்கள்

காணாது போகும்

மாநிலத்தின் மாண்பும்

பாங்காய் மீட்போம்

துரத்துவோம் பகையே

தூங்கிடா கண்களோடு

திண்மையோடு திரள்வோம்

தலைக்கனம் இறக்க!

தலைவரின் தத்துவம்

தந்திடும் வலிமை

தலைமுறைகள் கடந்தும்

களையும் இழிவை;

தரணியில் வெற்றி

திராவிடர்க்கே! கலங்காதே,

போர் முரசும்

ஒலித்திடும் வெல்ல!

போக்கிரிகள் திமிரும்

அடங்கும் மெல்ல!

பொய்யரின் ஆட்டம்

ஒடுங்கும்;  ஒல்லார்

பணிய விறல் கொள்வோம்;

காலம் பதில் சொல்லும்

பாதாளம் காட்டும் !!

 

 

 

 

 

 

 


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிலை அல்ல அவர் சித்தாந்தம் (கவிதை)”

அதிகம் படித்தது