சி.பி.எஸ்.இ அறிவிப்பு: பள்ளி வாகனங்களில் சி.சி.டி.வி கேமரா கட்டாயம் பொறுத்த வேண்டும்
Feb 28, 2017
சமீபத்தில் வடமாநிலத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். ஆதலால் அனைத்து பள்ளி வாகனங்களில் சி.சி.டி.வி கேமரா கட்டாயம் பொறுத்த வேண்டும் என்று சி.பி.எஸ்.இ வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் பொருத்தப்படும் கேமரா எப்பொழுதும் செயல்படும் நிலையிலேயே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் பள்ளி வாகனங்கள் அனைத்திற்கும் மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்க வேண்டும் என்றும், பேருந்தின் கதவுகள் நன்றாக மூடப்பட்டிருக்க வேண்டும், எப்பகுதியில் சென்று கொண்டிருப்பதை அறிவதற்காக ஜி.பி.எஸ். பொருத்த வேண்டும், வாகனங்களில் தீயணைப்பு கருவிகள் பொருத்தவேண்டும் போன்றவை அந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் மாணவர்கள் உட்காரும் சீட் பழுதாகாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும், வாகனத்தில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும், ஆபத்தான நேரங்களில் மாணவர்கள் வெளியேறுவதற்கான கதவுகள் அமைக்கப்பட வேண்டும், செல்போன் வசதி இருக்க வேண்டும், முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும் போன்ற அனைத்து அத்தியாவசிய தேவைகளை அனைத்து பள்ளி வாகனங்களிலும் இருக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சி.பி.எஸ்.இ அறிவிப்பு: பள்ளி வாகனங்களில் சி.சி.டி.வி கேமரா கட்டாயம் பொறுத்த வேண்டும்”