சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுப்ரீம்கோர்ட் உத்தரவை மதிக்காமல் சித்தராமையா அறிவிப்பு: காவிரியில் தண்ணீர் திறக்க முடியாதுOct 19, 2016

காவிரி நீர் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் நாளையும் இவ்வழக்கு தொடரும் என்றும் மறு உத்தரவு வரும்வரை காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

siragu-cavery-water-2

அனால் கர்நாடக அரசின் முதல்வர் சித்தராமையா கர்நாடக அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்றும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காமல் கூறியுள்ளார்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் நகல் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும், கிடைத்தபிறகு வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி தண்ணீர் இருப்பு பற்றி சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் அளிப்போம் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த காவிரி நீர் வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்துள்ளது சுப்ரீம் கோர்ட்டு.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுப்ரீம்கோர்ட் உத்தரவை மதிக்காமல் சித்தராமையா அறிவிப்பு: காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது”

அதிகம் படித்தது