நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

செட்டிநாட்டு சமையல்- வதக்கு சட்டினி அல்லது கதம்ப சட்டினி, உக்ரா

ரா.பொன்னழகு

Sep 6, 2014

வதக்கு சட்டினி அல்லது கதம்ப சட்டினி

kadhamba sattiniதேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – 2

கடுகு –சிறிதளவு

உளுந்தம்பருப்பு –சிறிதளவு

கடலைப்பருப்பு –சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 2

பச்சைமிளகாய் – 1

பெருங்காயம் – 2 துண்டு

கறிவேப்பிலை –சிறிதளவு

கொத்துமல்லி –சிறிதளவு

புதினா –சிறிதளவு

தேங்காய துருவல் – ¼கோப்பை

உப்பு –தேவையான அளவு

புளி – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

பூண்டு – 5 பல்

செய்முறை:

சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் சேர்த்து பொறிய விடவும். பிறகு காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், வெங்காயம், நறுக்கிய தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, புளி, தேங்காய் இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு சேர்த்து ஆறிய பின்பு அரைக்கவும். சுவையான கதம்ப சட்டினி தயார்.

உக்ரா

ukraதேவையான பொருட்கள்:

ரவை – 1 கோப்பை

பாசிபருப்பு – 1 கோப்பை

வெல்லம் – 1 ½கோப்பை

ஏலக்காய் – 2

முந்திரிபருப்பு – 1 தேக்கரண்டி

நெய் – 50 கிராம்

செய்முறை:

பாசிபருப்பை வெறும் சட்டியில் பொன்னிறமாக வறுத்து வேகவைத்துக்கொள்ளவும்.

ரவையை சட்டியில் வறுத்துக்கொள்ளவும்.

வெல்லத்தை பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

சட்டியில் ரவையுடன் தண்ணீர் சேர்த்து வேகவைக்க வேண்டும். வெந்ததும் பாசிபருப்பு, வெல்லம் இவற்றை சேர்த்து நெய் விட்டு நன்கு கிளறவும், இவற்றை ¼மணி நேரம் அடுப்பில் வைக்கவும். அதை அடிக்கடி கிளறவும். பின் தேங்காய் துருவல், ஏலக்காய், முந்திரிபருப்பு சேர்த்து இறக்கி விடவும். சுவையான உக்ரா தயார்.


ரா.பொன்னழகு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செட்டிநாட்டு சமையல்- வதக்கு சட்டினி அல்லது கதம்ப சட்டினி, உக்ரா”

அதிகம் படித்தது