சென்னையில் நடந்த வன்முறை தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ்
Jan 24, 2017
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வந்தது. ஏழு நாட்களாக அமைதியாக நடைபெற்ற இப்போராட்டத்தில் தேச விரோத சக்திகள் இப்போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்தினர்.
இந்த வன்முறையில் காவல் நிலையம் மற்றும் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 76பேர் கைது செய்யப்பட்டனர், 97 போலீசார் காயமடைந்தனர், 63 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று டி.ஜி.பி மற்றும் தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னையில் நடந்த வன்முறை தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ்”