சென்னை உயர்நீதிமன்றம் அண்ணா நூலகத்தை பரமாரிக்க இறுதி கெடு விதித்துள்ளது
Nov 4, 2016
சென்னை கோட்டுர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் 2010ல் 178 கோடி செலவில் துவங்கப்பட்டது. இந்நூலகம் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம். இங்கு எட்டு மாடிகளில் பல பிரிவில் பல நூல்கள் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நூலகத்தை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டி, முறையாக பராமரிக்காததற்கான புகைப்பட ஆதாரங்களுடன் பேராசிரியை மனோன்மணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் நூலகத்தைப் பராமரிக்க குழு அமைக்க வேண்டும் என்று ஜூன் மாதம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை தமிழக அரசு அமைக்கவில்லை.
தமிழக அரசு இதற்காக குழு அமைத்து டிசம்பர் 14க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் இல்லையேல் நீதிமன்றம் குழுவை அமைத்து உத்தரவிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம் அண்ணா நூலகத்தை பரமாரிக்க இறுதி கெடு விதித்துள்ளது”