சென்னை உயர்நீதிமன்றம்: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தாக்குதல் தொடர்பாக விசாரணை
Jan 25, 2017
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின் இறுதியில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களான மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது.
மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த மீனவர்களும் தாக்கப்பட்டனர். இதில் இரு சக்கர வாகனங்கள், மீன் சந்தைகள், மீனவர்களின் குடிசைகள் போன்றவை தீக்கிரையாக்கப்பட்டது. இத்தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்தனர் காவல்துறையினர். இதில் காயமடைந்தோர் ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரணை செய்த நீதிபதி மகாதேவன், இத்தாக்குதல் தொடர்பான விசாரணை விரிவாக நடைபெறும் என்றும், வரும் திங்கட்கிழமை உரிய ஆதாரங்களுடன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம்: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தாக்குதல் தொடர்பாக விசாரணை”