சென்னை உயர்நீதிமன்றம்: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான ஸ்டாலின் வழக்கில் முதல்வருக்கு நோட்டீஸ்
Feb 27, 2017
கடந்த பிப்ரவரி 18ம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. திமுக உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
ஆனால் ரகசிய வாக்கெடுப்பை நிராகரித்தார் சபாநாயகர் தனபால். இதையடுத்து அங்குகடும் அமளி ஏற்பட்டது. இதனால் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர். பின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்றதாக அறிவித்தார் சபாநாயகர்.
தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஸ்டாலின். நம்பிக்கை தீர்மானத்தின் மீதான சபாநாயகர் முடிவு செல்லாது, தலைமை செயலர், கவர்னரின் செயலர், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் மேற்பார்வையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்று(27.02.17) இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயகர் தனபால், ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர், சட்டசபை செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் சட்டசபை வீடியோவை தாக்கல் செய்ய வேண்டும் என்று மார்ச் 10ம் தேதிக்கு இவ்வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம்: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான ஸ்டாலின் வழக்கில் முதல்வருக்கு நோட்டீஸ்”