மே 19, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை உயர்நீதிமன்றம்: விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற தடை தொடரும்Apr 21, 2017

தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Siragu gay5

இவ்வழக்கின் விசாரனைணையில் சட்டவிரோதமான வீட்டு மனைகளையும், அம்மனையில் கட்டப்பட்ட வீட்டையும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று செப்டம்பர் 9ம் தேதி உத்தரவிட்டது நீதிமன்றம்.

இதனை எதிர்த்து ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணையில் 2016 அக்டோபர் 20க்கு முன் பத்திரப்பதிவு செய்த அங்கீகாரம் இல்லாத மனைகள் மற்றும் கட்டிடங்களை மறுபதிவு செய்யலாம் என கூறப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி மகாதேவன், இது குறித்து கொள்கை முடிவு எடுத்து அதற்கான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது.

மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு இதற்கான அறிக்கையை தாக்கல் செய்யும் வரை விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கான தடை நீடிக்கும் என்றும், பத்திரப்பதிவில் ஏற்பட்ட தளர்வையும் ரத்து செய்வதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இவ்வழக்கை மே 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம்: விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற தடை தொடரும்”

அதிகம் படித்தது