ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை உயர்நீதிமன்றம்: விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பதற்கான பொதுநல வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்Jan 5, 2017

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர் இல்லாததாலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் கருகுவதால் விவசாயிகளின் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணமடைவது தொடர்கதையாகி வருகிறது.

siragu-chennai-highcourt

இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க மாநிலம் முழுவதும் குழு அமைக்க வேண்டும், மேலும் பருவமழை பொய்க்கும் காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தைக் காக்க வேண்டும் என்றும் அவர் அளித்த மனுவில் இருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் விசாரனையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் விவசாயத்தைக் காக்கவும், விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். இவ்விசாரணையின் முடிவில் இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கை பிப்ரவரி 14க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம்: விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பதற்கான பொதுநல வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்”

அதிகம் படித்தது