ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை உயர்நீதிமன்றம்: ஷரியத் கவுன்சில்கள் நீதிமன்றம் போல் செயல்படுவது தெரியவந்தால் நடவடிக்கைDec 19, 2016

ஷரியத் கவுன்சில்கள் நீதிமன்றம் போல் செயல்படுவதாக அப்துல் ரஹ்மான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு திருவல்லிக்கேணி துணை ஆணையர் அனைவரும் விருப்பமுடன் ஷரியத் கவுன்சில்களுக்கு வருகிறார்கள் என்று பதில் மனு அளித்திருந்தார்.

siragu-chennai-highcourt

இதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த பதில் திருப்தி அளிக்காததால், புதிய பதில் மனுவை நான்கு வாரங்களில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மசூதிகளில் ஷரியத் கவுன்சில்கள் நீதிமன்றங்கள் போல் செயல்படுவது தெரியவந்தால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம்: ஷரியத் கவுன்சில்கள் நீதிமன்றம் போல் செயல்படுவது தெரியவந்தால் நடவடிக்கை”

அதிகம் படித்தது