சென்னை மெரினாவில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
Jan 28, 2017
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 17லிருந்து 23வரை அமைதியாக நடைபெற்ற இப்போராட்டம், ஜனவரி 23ல் கலவரமாக மாறியது.
இதையொட்டி 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மெரினாவில் மீண்டும் போராட்டம் நடத்துவதற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் திட்டமிட்டுள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மெரீனா கடற்கரையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் எந்த போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்தக்கூடாது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம், அவ்வாறு வதந்திகளை பரப்புவோர் மீதும் மற்றும் அதை நம்பி வருவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதும் என்று காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை மெரினாவில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்”